தமிழ்நாடு

நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா: எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது புத்திசாலித்தனமல்ல

1st Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது புத்திசாலித்தனமில்லை என்றார் பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி.
 கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் புதன்கிழமை வழிபட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
 நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெறும்போது ஒருநாள் அல்லது தொடரையே கூட புறக்கணிக்கலாம்.
 ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது புத்திசாலித்தனமல்ல.
 பொருளாதார வளர்ச்சி என்பது, உலகம் முழுவதும் அவசியம் என்பதை திராவிடர் நாடு எனக் கூறியவர்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.
 மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச முயன்ற விவகாரத்தில், தொலைக்காட்சி சேனல்களோ, பத்திரிகைகளோ இல்லை என்றால், இது எதுவுமே நடந்திருக்காது.
 வரும் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவது குறித்து பாஜக - அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் குருமூர்த்தி.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT