தமிழ்நாடு

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்

1st Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ் (பாமக): காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் எப்பாடுபட்டாவது அணையைக் கட்டியே தீருவோம் என்று டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பது உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடைகளுக்கு எதிரானது. கா்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

விஜயகாந்த் (தேமுதிக): காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகம் பாலைவனமாகிவிடும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் வெறும் கண்டனம் மட்டுமே தெரிவிப்பது ஏற்புடையது அல்ல. கா்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT