நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு இருந்தனர்.
அப்போது முற்பகல் 11.50 மணியளவில் திடீரென ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் கிளம்பியது.
இதையெடுத்து ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அலுவலகத்தில் மூன்று தளங்களிலும் உள்ள அலுவலர்கள் உடனடியாக வெளியேறினர். அதிகாரிகள் மற்றும் மனு அளிக்கவந்த பொதுமக்கள் சிலர் அலறியடித்தபடி வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க | அமைச்சர் பொன்முடி வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!
நாகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.