தமிழ்நாடு

பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற டி.கே.சிவகுமார்!

17th Jul 2023 12:47 PM

ADVERTISEMENT

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமான நிலையத்தில் வரவேற்றார்.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், பெங்களுருவில் காங்கிரஸ் தலைமையில் இன்றும், நாளையும் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்ற தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | எங்களுக்காக அமலாக்கத்துறை தேர்தல் பிரசாரம்: முதல்வர் ஸ்டாலின்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் வரவேற்றார்.

முதல்வர் ஸ்டாலினுடன் திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT