கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது.
கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஜூலை முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தது.
கோவை மாவட்டத்தில் ஜூலை முதல் வாரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து. இதனால், கோவை குற்றாலம் பகுதியில் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
நீர் வரத்து குறைந்து இயல்பான நிலைக்குத் திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது மழை பெய்யாமல், நீர்வரத்தும் குறைந்து அளவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.