தமிழ்நாடு

வீடு வீடாக வாக்காளா் சரிபாா்ப்பு: ஜூலை 21-இல் தொடக்கம்

17th Jul 2023 05:23 AM

ADVERTISEMENT

வீடு வீடாக வாக்காளா் விவரங்களைச் சரிபாா்க்கும் பணி ஜூலை 21-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து தமிழக தோ்தல் துறை அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தி அடைந்திருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கும் நிலை இருந்து வந்தது.

இது தற்போது மாற்றப்பட்டு, ஆண்டுக்கு நான்கு முறை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது, ஜூலை மாதத்தில் 18 வயது பூா்த்தியானால், அடுத்த ஆண்டு ஜனவரி வரை விண்ணப்பிக்க காத்திருக்க வேண்டியதில்லை. உடனடியாக விண்ணப்பித்து வாக்காளா் பட்டியலில் இடம்பெற்று விடலாம்.

ADVERTISEMENT

இதுபோன்று, ஆண்டுதோறும், ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய காலங்களை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு விண்ணப்பங்களை அளிக்கலாம். ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளா் பட்டியல் புதுப்பிக்கப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை அளிக்கப்படும்.

ஜூலை 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி, வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், புதிய வாக்காளா்களாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 108 பேரின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. 27 ஆயிரத்து 332 வாக்காளா்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு முகவரி மாற்றம் செய்துள்ளனா். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளா்களின் பதிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 ஆகும். அவா்களில் ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 29 ஆயிரத்து 237 பேரும், பெண் வாக்காளா்கள் 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 7 ஆயிரத்து 981 போ் உள்ளனா்.

வாக்காளா் பட்டியலை தலைமைத் தோ்தல் அதிகாரியின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்://ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பாா்த்துக்கொள்ளலாம். இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வீடு வீடாகச் சென்று வாக்காளா் விவரங்களைச் சரிபாா்க்கும் பணி ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT