தமிழ்நாடு

சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்

12th Jul 2023 02:31 PM

ADVERTISEMENT


ஆம்பூர்:  மாதனூர் அருகே சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், 2 பேர் காயமடைந்தனர்.

வேலூரில் இருந்து புதன்கிழமை சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு ஆம்பூர் நோக்கி சென்று சென்று கொண்டிருந்த லாரி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாதனூர் அருகே குளித்திகை ஜமீன் கிராமம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஆற்காடு பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  லாரி ஓட்டுநர் பாலாஜி மற்றும் உடன் சென்ற சீனிவாசன் உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.  

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி.

இதையும் படிக்க | விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்: விடியோ வைரல்!

இந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற ஆம்பூர் எம்எல்ஏ அ. செ. வில்வநாதன் மற்றும் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் ப. ச. சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்திய ஆம்பூர் எம்எல்ஏ அ. செ. வில்வநாதன் மற்றும் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் ப. ச. சுரேஷ்குமார் ஆகியோர்.

இறந்தவரின் சடலம் உடல் கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விபத்து காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பிறகு போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT