தமிழ்நாடு

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

12th Jul 2023 11:42 AM

ADVERTISEMENT

அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதத்தில்..

உணவுப் பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன்.

உணவுப் பொருள்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

ADVERTISEMENT

படிக்க: வெள்ளத்தால் உருக்குலைந்த ஹிமாசல்: கலங்க வைக்கும் விடியோ!

மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவுப் பொருள்களை விடுவிப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும்.

அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கடும் பாதிக்குள்ளாகியுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு ஒதுக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT