திருச்சியில் ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் அவர்களின் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் வருகிற ஜூலை 26ஆம் தேதி (புதன்கிழமை) திருச்சி, ராம்ஜி நகர், கருமண்டபம் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.