தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

12th Jul 2023 06:00 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் முன்பதிவு புதன்கிழமை (ஜூலை 12) முதல் தொடங்கவுள்ளது.

ரயில் பயணிகள் வசதிக்காக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) வாயிலாக 120 நாள்களுக்கு முன்பாக, பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை நவ.12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நவ.9-ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு புதன்கிழமை (ஜூலை 12) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இதேபோல, நவ.10-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13-ஆம் தேதி முதலும், நவ.11-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவ.12-ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் முன்பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT