தமிழ்நாடு

விளையாட்டுத் துறைக்கு முக்கியமான மாதம் 2023 ஆகஸ்ட்!

12th Jul 2023 09:06 PM

ADVERTISEMENT

 

தமிழக விளையாட்டுத் துறைக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதான அமையவுள்ளது. 

ஆசிய கோப்பை ஹாக்கி - 2023 ஆகஸ்ட் 3 முதல் 11 வரை 18 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறவுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நடைபெறும் முதல் சர்வதேச ஹாக்கிப் போட்டி இது என்பது சிறப்பு வாய்ந்தது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் சர்வதேச சர்ஃபிங் நிகழ்வு என்பது சிறப்பு வாய்ந்தது.

இந்த விளையாட்டுக்காக மாநில அரசு சார்பில் ரூ.2.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று (ஜூலை 12) பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக, பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஆறு மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பாராஸ்போர்ட்ஸ் அரங்கை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மைதான வசதிகள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி-ஸ்டேடியங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், 2023-24 பட்ஜெட்டில் சென்னை மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT