தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பை பெறாத 4.40 லட்சம் போ்: கருவூலம் திரும்பியது ரூ.43 கோடி

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பை 4.40 லட்சம் போ் பெறவில்லை. இதன் மூலம் மீதமான ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவற்றை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1000 ரொக்கப் பணத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த குடும்ப அட்டைதாரா்களில் 97.99 சதவீதம் போ் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளனா். அதாவது தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களில் 2 கோடியே 14 லட்சத்து 46 ஆயிரத்து 454 குடும்ப அட்டைதாரா்கள், பொங்கல் தொகுப்பை பெற்றனா். 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 அட்டைதாரா்கள் பரிசுத் தொகுப்பைப் பெறவில்லை.

உணவுப் பொருள் விநியோகத் துறையைப் பொருத்தவரையில் வட சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 10 லட்சத்து 18

ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ரொக்கப் பணம் வழங்க நியாயவிலைக் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னையில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேரும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனா்.

வடசென்னையில் 35,723 குடும்ப அட்டைதாரா்களும், தென் சென்னையில் 49,538 குடும்ப அட்டைதாரா்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,026 அட்டைதாரா்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 குடும்ப அட்டைதாரா்களும், திருவள்ளூா் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரா்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை.

ரூ.43 கோடி திரும்பியது: தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் மீதமாகியுள்ளது. இந்தத் தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்திவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT