ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், காந்திநகர் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை அறிவித்துள்ளது.
படிக்க | 2023-24ல் பொருளாதார வளர்ச்சி 6.8%: பொருளாதார ஆய்வறிக்கை அம்சங்கள்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 ஆண்டு வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு மீது பெண் சீடர் ஒருவர் புகாரளித்திருந்தார்.
இந்த வழக்கு காந்திநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆசாராம் பாபு ஆயுள் தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.