தமிழ்நாடு

வீடூர் அணையிலிருந்து 135 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு!

31st Jan 2023 08:34 PM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் வீடூர் அணையிலிருந்து 135 நாள்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து, திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு  2022 -2023 – ஆம் ஆண்டு பாசனத்திற்கு பிப்ரவர் 1 முதல் ஜூன் 15 வரை வரை 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி தண்ணீர்  திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் ஆக மொத்தம் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT