தமிழ்நாடு

மெரினாவில் பேனா சின்னம் வைத்தால் உடைப்பேன்: சீமான்

DIN


சென்னை: அரசுப் பள்ளிகளை சீரமைக்க பணமில்லை, ஆனால் கடலில் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, மெரினாவில் பேனா சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் சீமான் வழங்கினார்.

அவரது பேச்சுக்கு கூட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததால், கூட்டத்திலிருந்து வெளியேறி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மெரினாவில் உள்ள கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில்  மாற்றுக் கருத்து சொன்னால் கூச்சல், குழப்பம் செய்கிறார்கள்.

நினைவுச் சின்னம் வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்கக் கூடாது. கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னத்தை வைத்தால், மீனவர்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

அரசுப் பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசிடம் பணமில்லை, ஆனால் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், தனது எதிர்ப்பை மீறி, மெரினாவில் பேனா சின்னம் வைத்தால் அதனை உடைப்பேன் என்றும் கூறினார்.

நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. ஆனால் கடலில் எதற்கு நினைவுச்சின்னம் என்றுதான் கேட்கிறேன் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக் கேட்புக் கூட்டம்
தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடலில், பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித் துறை, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த ஆணையத்தின் சாா்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT