தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக நிலைப்பாடு என்ன?

31st Jan 2023 03:27 PM

ADVERTISEMENT

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

சென்னை தியாகராய நகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில - மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

ADVERTISEMENT

இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு, யாருக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டி:

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவைத் தொடா்ந்து காலியான இந்தத் தொகுதிக்கு பிப்.27-இல் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

இடைத்தோ்தலில் போட்டியிட இதுவரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), எஸ்.ஆனந்த் (தேமுதிக), ஏ.எம்.சிவபிரசாந்த் (அமமுக), மேனகா நவநீதன் (நாம் தமிழா் கட்சி) ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

வேட்புமனு தாக்கல் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் தொடங்கியது. வேட்பு மனுக்கள் தாக்கலுக்கான கடைசி நாள் பிப்.7 ஆகும். பிப்.8-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்.10 கடைசி நாள். பிப்.27-ஆம் தேதி வாக்குப்பதிவு, மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT