தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: 2 நாள்களில் முக்கிய முடிவு -பாஜக

31st Jan 2023 05:37 PM

ADVERTISEMENT

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் 2 நாள்களில் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன. 31) மாலை நடைபெற்று வருகிறது. 

சென்னை தியாகராய நகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில - மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாநில பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். 

இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து எங்களின் கடுத்துகளைக் கேட்டு கட்சீன் தேசியத் தலைமை முடிவு செய்யும் எனத் தெரிவித்த அவர், 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக 2 நாள்களில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT