தமிழ்நாடு

காவிரியில் நீர் எடுக்கக்கூடாது: தமிழக அரசு மனுத்தாக்கல்

31st Jan 2023 09:20 PM

ADVERTISEMENT

 

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்துக்கு காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடக அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்கஅதானி குழுமத்தின் 3 நிறுவன பங்குகள் இன்று சரிவு! 

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக தமிழக - கர்நாடக மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெங்களூரு மாநகராட்சிக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT