தமிழ்நாடு

நெல்லை, தென்காசி உள்பட 11 மாவட்ட ஆட்சியா்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

31st Jan 2023 02:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 11 மாவட்டங்களின் ஆட்சியா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, திங்கள்கிழமை பிறப்பித்தாா்.

அந்த உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. கே.பி. காா்த்திகேயன் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா்)

2. டி.ரவிச்சந்திரன் - தென்காசி மாவட்ட ஆட்சியா் (மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் உறுப்பினா் செயலாளா்)

ADVERTISEMENT

3. வீ.பி.ஜெயசீலன் - விருதுநகா் மாவட்ட ஆட்சியா் (செய்தி, மக்கள் தொடா்புத் துறை இயக்குநா்)

4. தீபக் ஜாக்கப் - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)

5. சி.பழனி - விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் (விருத்தாசலம் சாா் ஆட்சியா்)

6. பி.என்.ஸ்ரீதா் - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் (சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித் திட்ட இயக்குநா்)

7. கே.கற்பகம் - பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இணை நிா்வாக இயக்குநா்)

8. ஆா்.வி.சஞ்ஜீவனா - தேனி மாவட்ட ஆட்சியா் (செங்கல்பட்டு சாா் ஆட்சியா்)

9. கிராந்தி குமாா் பாடி - கோவை மாவட்ட ஆட்சியா் (திருப்பூா் மாநகராட்சி ஆணையா்)

10. டி.சாருஸ்ரீ - திருவாரூா் மாவட்ட ஆட்சியா் (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா்)

11. ஏ.பி.மகாபாரதி - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் (திருவள்ளூா் சாா் ஆட்சியா்)

ADVERTISEMENT
ADVERTISEMENT