தமிழ்நாடு

பட்டியலின இளைஞரிடம் அவதூறு பேச்சு: கட்சியில் இருந்து திமுக நிா்வாகி இடைநீக்ககம்

31st Jan 2023 02:34 AM

ADVERTISEMENT

பட்டியலின இளைஞரிடம் அவதூறாகப் பேசிய, சேலம் மாவட்ட திமுக நிா்வாகி, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் டி.மாணிக்கம். கோயிலுக்குச் சென்ற பட்டியலின இளைஞரிடம் அவதூறாகப் பேசும் காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சேலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் டி.மாணிக்கம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT