தமிழ்நாடு

காந்தியடிகள் நினைவு தின சிறப்பு புகைப்படக் கண்காட்சி: ஆளுநா், முதல்வா் தொடக்கி வைத்தனா்

31st Jan 2023 02:30 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அவரது சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் திங்கள்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். சிறப்புப் புகைப்படக் கண்காட்சியையும் அவா்கள் திறந்து வைத்தனா்.

மகாத்மா காந்தியடிகளின் 76-ஆவது நினைவு தினம், நாடு முழுவதும் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்திலும் காந்தியடிகள் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

சிறப்புப் புகைப்படக் கண்காட்சி: மகாத்மா காந்தியடிகளின் தியாக வரலாற்றை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை எழும்பூா் அரசு அருங்காட்சியகத்தில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.

‘காந்தியும் உலக அமைதியும்’ என்ற தலைப்பிலான இந்த புகைப்படக் கண்காட்சி பிப். 5 வரை நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கண்காட்சியை, பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாகப் பாா்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT