தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமனம். தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன், விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம் ஆட்சியராக பழனி நியமனம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
படிக்க | சேலம் சாதிய அடக்குமுறை விவகாரம்! திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!
இதேபோன்று கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை ஆட்சியராக கிராந்திகுமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.