தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் பிப்.1-இல் பலத்த மழைக்கு வாய்ப்பு

30th Jan 2023 01:49 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா மாவட்டங்களில் பிப்.1-ஆம் தேதி பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் பிப்.1-ஆம் தேதி தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்.2-ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

தென் கிழக்கு மற்றும் அதையொட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ. சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் ஜன.31, பிப்.1 ஆகிய தேதிகளில் மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT