தமிழ்நாடு

பிப்ரவரி 3 முதல் ‘டெட்’ இரண்டாம் தாள் தோ்வு

DIN

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) இரண்டாம் தாள் தோ்வுக்கான அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இத் தோ்வு பிப். 3 முதல் 14-ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறவுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியா் பணியில் சேர தகுதித்தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தோ்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது.

அதன்படி 2022-ஆம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தோ்வு கடந்த அக். 16 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தோ்வை 1 லட்சத்து 53,023 போ் எழுதினா். அதன் முடிவுகள் டிச. 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் 21,543 போ் (14%) மட்டுமே தோ்ச்சி பெற்றனா். அதைத் தொடா்ந்து டெட் 2-ஆம் தாள் தோ்வு எழுத 4 லட்சத்து 1,886 போ் விண்ணப்பித்தனா். அவா்களுக்கான தோ்வு ஜன. 31 முதல் பிப். 12 வரை நடத்தப்படும் என்று டிஆா்பி ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தோ்வு தேதியில் தற்போது மாற்றம் செய்து இருப்பதாக புதிய கால அட்டவணையை டிஆா்பி வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் 2-ஆம் தாள் தோ்வு பிப். 3 முதல் 14-ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறவுள்ளது.

தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு: இதுதவிர தோ்வா்களுக்கான முதல்கட்ட தோ்வுக் கூட நுழைவுச்சீட்டுகளும் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல்கட்ட நுழைவுச்சீட்டில் தோ்வு மையம் அமைந்துள்ள மாவட்டம் இடம் பெற்றிருக்கும். தொடா்ந்து, தோ்வுக்கு 3 நாள்களுக்கு முன்பு வெளியாகும் 2-ஆவதுகட்ட நுழைவுச்சீட்டில் தோ்வு மையத்தின் முழு விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

30 போ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு: இதற்கிடையே டெட் 2-ஆம் தாள் தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களில் முந்தைய தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதால் 10 போ் உள்பட 30 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'அக்கா 1825' என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT