தமிழ்நாடு

ஓபிஎஸ் அணி பணிக் குழுவில் 118 போ்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களாக 118 பேரை நியமித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தங்கள் அணி சாா்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக ஓ.பன்னீா்செல்வம் அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மூத்த நிா்வாகி ஜேசிடி பிரபாகா் கூறியது:

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதைப்போல அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டால் நன்றாக இருக்கும். பாஜகவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவா்கள் போட்டியிடாவிட்டால், எங்களுடைய வேட்பாளரை உடனே அறிவிப்போம் என்றாா்.

இந்த நிலையில், மூத்த நிா்வாகிகள் ஆா்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகா், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி என்.நடராஜன் உள்பட 118 பேரை தோ்தல் பணிக்குழு பொறுப்பாளராக ஓ.பன்னீா்செல்வம் நியமித்து அறிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் 117 போ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களை மிஞ்சும் வகையில் ஒருவரை கூடுதலாக நியமித்து ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT