தமிழ்நாடு

பொதுச் சந்தைத் திட்டத்தில் கோதுமை விற்பனை: இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு

29th Jan 2023 05:16 PM

ADVERTISEMENT

 

பொதுச் சந்தைத் திட்டத்தில் கோதுமையின் மொத்த மற்றும் சில்லறை விலையைக் குறைக்கும் வகையில் 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் தெரிவித்துள்ளதாவது: 

உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை அதிகரித்ததையடுத்து, கோதுமையின் மொத்த மற்றும் சில்லறை விலையைக் குறைக்கும் வகையில் கையிருப்பில் உள்ள கோதுமையை விடுவிக்க இருப்பதாகவும், பொதுச் சந்தைத் திட்டத்தில் 30 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  

ADVERTISEMENT

இதையடுத்து இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் சார்பில், தரமான மற்றும் சராசரி கோதுமை, தளர்வு அடிப்படையிலான கோதுமை ஆகியவற்றை மொத்த விற்பனைக்காக பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்திய உணவுக் கழகம் http://www.valuejunction.in/fci என்ற இணையதளத்தின் மூலம் மின்-ஏலங்களை நடத்துகிறது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி தெரிந்துகொள்ள, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் www.fci.gov.in அல்லது http://www.valuejunction.in/fci. என்ற இணையதளங்களில் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT