தமிழ்நாடு

சோழமண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள்: பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் தொடங்கியது

29th Jan 2023 02:33 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நீடாமங்கலம் வட்ட சதுரங்க கழகம்,  பூவனூர் ஊராட்சிமன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் எம்.கே.ராமநாதன் நினைவு கோப்பைக்கான சோழமண்டல அளவிலான  ஒரு நாள் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த  350-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், மற்றும் பொதுப் பிரிவு  விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

சதுரங்கம்  விளையாடும் பள்ளி மாணவிகள்.

பெங்களூர் தர்மராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார். கோயில் செயல்அலுவலர் மணிகண்டன், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். பெங்களூர் தர்மராஜ், கோயில் தக்கார் மாதவன்,  ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிமோகன், சதுரங்க கழகம் ஆர்.கே. பாலகுணசேகரன், திருவாரூர் மாவட்ட சதுரங்க தலைவர் என்.சாந்தகுமார்,   கிராம ஊராட்சி தலைவர் கே.மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா

ADVERTISEMENT

முன்னதாக, கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் விளையாட்டு வீரர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT