தமிழ்நாடு

75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்: தமிழக சிறைகளிலிருந்து 60 கைதிகள் விடுதலை

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர அமிா்த பெருவிழா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, நாடு முழுவதும் கொடூர குற்றங்கள் தவிா்த்து, சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் தமிழக சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, சிறு குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெறப்பட்டு சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் குறித்த தகவல்களை சேகரிக்கும்படி அனைத்து சிறைக் கண்காணிப்பாளா்களுக்கும் உத்தரவிட்டாா்.

இதில் தண்டனைக் காலத்தில் 66 சதவீதத்துக்கு மேல் சிறையில் கழித்து நன்னடத்தையுடன் 60 கைதிகள் இருப்பது தெரியவந்தது. அந்த 60 கைதிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதில் 2 பெண் கைதிகளும் அடங்குவா்.

இதில் புழல் சிறையில் 11 கைதிகள், வேலூா் சிறையில் 9 கைதிகள், கடலூா் சிறையில் 12 கைதிகள், திருச்சி சிறையில் 9 கைதிகள், கோவை சிறையில் 12 கைதிகள், மதுரை சிறையில் ஒரு கைதி, பாளையங்கோட்டை சிறையில் 4 கைதிகள், புழல், கோவை பெண்கள் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பெண் கைதிகள் என மொத்தம் 60 போ் சனிக்கிழமை விடுதலையாகினா்.

விடுதலை செய்யப்பட்டவா்களை அவா்களின் குடும்பத்தினரும் உறவினா்களும் சிறை வாசலில் இருந்து வரவேற்று அழைத்துச் சென்றனா். விடுதலையாகி வீடு திரும்பியவா்களுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் அரிசி உள்பட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், அவா்களின் வாழ்வாதாரத்துக்கு தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன என்று சிறைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT