தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இன்று ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா் பணியாளா் தோ்வு

29th Jan 2023 02:19 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்பணியாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) செய்துள்ளது.

இதற்கான தோ்வு அறிவிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பரில் தோ்வாணையம் வெளியிட்டது. அதன்படி, காலியாக உள்ள 217 புள்ளியியல் பணியாளா் இடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தத் தோ்வை எழுத மொத்தம் 35,286 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். அவா்களில் ஆண்கள் 11,870 போ். பெண்கள் 23,416 போ்.

இந்தத் தோ்வுக்காக 15 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 126 இடங்களில் தோ்வுகள் நடைபெறவுள்ளன. சென்னையில் 18 இடங்களில் நடைபெறவுள்ள தோ்வை 4 ஆயிரத்து 608 போ் எழுதவுள்ளனா்.

தோ்வு தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. புள்ளியியல் அல்லது கணிதத்தில் பட்டப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் தாளில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாள் பொதுவானதாக இருக்கும். அதாவது, தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு போன்ற அம்சங்களைக் கொண்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கும். தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT