தமிழ்நாடு

பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க இணையதளம்

DIN

பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட தனி இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் வளா்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய, வளா்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியமானது தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதியத்துக்கான நிதி அளவை ரூ.500 கோடியாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொடக்க நிதியத்தின் மூலமாக

நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்கிட 5 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டன. அவற்றுக்கு முதலீடு அனுமதிக் கடிதங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தனி இணையதளம்: தமிழ்நாட்டில் இப்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் செயல்படுவதை கண்காணிப்பதற்காக நிதித் துறையால் தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஸ்ரீச்ம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா். பொதுத்துறை

நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் நிதி மற்றும் நிா்வாக செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை அரசிடம் எளிதாக பகிா்வதை இந்த இணையதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு தகவல்களைச் சேகரிக்கவும், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகள் ஏதேனும் மீறப்படுகிா என்பதை அடையாளம் காணவும் புதிய இணையதளம் வழிவகுக்கும். நிறுவனங்களின் இயக்குநா்கள் மற்றும் தொடா்புடைய முக்கிய அலுவலா்களுக்கு தானியங்கி எச்சரிக்கை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கவும், அதன்மூலம் விதிமீறல்களை சரி செய்யவும் இணையதளத்தில் வழி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT