தமிழ்நாடு

ரூ.303 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 303.24 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பொம்மைக் குட்டைமேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி செலவில் 60 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை வரவேற்றார். ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். என். ராஜேஸ்குமார், நாமக்கல் மக்களவை உறுப்பினர். ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பொன்னுசாமி, திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சிறப்பு திட்ட செயலாக்கத்தின் அரசு சிறப்பு செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT