மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு சனிக்கிழமை மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 896 கன அடியிலிருந்து வினாடிக்கு 933 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதானி குழுமத்தில் எல்ஐசியின் ரூ. 74 ஆயிரம் கோடி, ஸ்டேட் வங்கியின் 40% நிதி!!
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 104.21அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 103.87 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 79.94 டி.எம்.சியாக உள்ளது.
சனிக்கிழமை மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.