தமிழ்நாடு

கூலமேடு ஜல்லிக்கட்டு: 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

DIN

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், கூலமேட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் பின்பற்ற வேண்டிய உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித் தலைவா் செ.காா்மேகம் வாசிக்க மாடுபிடி வீரா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு வனவிலங்கு நல வாரிய உறுப்பினர் மெட்டலும் பங்கேற்றார்.

மாடுபிடி வீரா்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களும், கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லாதவா்கள் மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனா். இதேபோல் போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு கால்நடை மருத்துவத் துறை சார்பாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டது.  

அதைத்தொடர்ந்து  மாடு பிடி வீரர்கள் 6 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல் சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். அப்போது முதலில் உள்ளூர் கோவில் காளையை அவிழ்த்துவிட்ட பின்னர் மற்ற காளைகளை அவிழ்த்துவிட தொடங்கினர். அதன்பிறகே சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து அடக்கி வருகின்றனர்,

மேலும், இந்த போட்டியில் 650 காளைகள், 300 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்காத காளையின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள், மின் விசிறி, குக்கர், வெள்ளி காசு உள்ளிட்ட  பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுக்களும்,108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் தற்போது ஒரு மாடுபிடி வீரர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த ஜல்லிக்கட்டு விழாவை கான ஆத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். தற்போது இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது

ஜல்லிக்கட்டு போட்டியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT