தமிழ்நாடு

கால் அழுகல் நோய் பாதித்த சீர்காழி மாணவி அபிநயா எப்படி இருக்கிறார்?

28th Jan 2023 04:58 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கால் அகற்றும் நிலையில் உயிருக்கு போராடிய 9-ஆம் வகுப்பு மாணவி அபிநயா, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பனங்காட்டு தெரு, அம்மன் நகரில் வசிப்பவர் கனிமொழி. இவரது கணவர் முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் அபிநயா (14).

இதையும் படிக்க.. புதிய மாணவர் சேர்க்கை நிறைவு: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி எங்கே?

ADVERTISEMENT

இவர் சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காலில் எஸ்எல்இ என்ற அரிய வகை கால் அழுகல் நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென தெரிவித்ததாகத் தெரிகிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா தந்தையை இழந்த நிலையில், மருத்துவச் செலவும் செய்ய முடியாமல், உயிருக்கு போராடிய நிலையில், தமிழக முதல்வரிடம் உதவி கோரியிருந்தார்.

இதையும் படிக்க.. அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!

இவரைப் பற்றிய செய்திகளும் விடியோக்களும் ஊடகங்கள் வாயிலாக தமிழக அரசை எட்டியது. இதையடுத்து, இவர் உடனடியாக சீர்காழியிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நிலை குறித்து மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவை மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில்  சந்தித்து நலம் விசாரித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் சீர்காழியைச் சேர்ந்த அபிநயா என்கின்ற 13 வயது சிறுமி எஸ்எல்இ என்கின்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சீர்காழி போன்ற பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த அவரின் இரு கால்களையும் நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில்  தந்தையை இழந்த அந்த குழந்தை தனது கால்களை எடுக்காமல் சரி செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தது.

தற்போது அந்த குழந்தைக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கால் விரல்களில் மட்டும் நோயின் பாதிப்பு கூடுதலாக இருக்கிற காரணத்தினால் விரல்கள் உதிர்ந்து போய் காணப்பட்டது. மேலும் கால்கள் நன்றாகத்தான் உள்ளது. குழந்தையின் தாயாருக்கு இங்கேயே தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

குழந்தையின் சிகிச்சைக்கு பின்னர்  ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரத்தியேகமான காலணியையும் துறையின் சார்பாக குழந்தைக்கு வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT