தமிழ்நாடு

ஸ்ரீ சாரநாத பெருமாள் கோயில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

DIN

தஞ்சாவூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்யதேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூச பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத  சாரநாதப்பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12 ஆவது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் சேவை சாதிக்கிறார்.

காவிரி நதி மூவாயிரம் தேவ ஆண்டுகள் தவம் செய்து திரேதா யுக, தை மாத பூச நட்சத்திர நாளன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும், பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போன்று பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து வருகிறார். 

தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்க வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றதாக வரலாறு. எனவே 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் தைப்பூச திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை காலை உற்சவர், சாரநாத பெருமாள் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஜபித்து, சிறப்பு பூஜைகள் செய்து, மங்கள் வாத்தியங்கள் ஒலிக்க, கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடியை கொடிமரத்தில் வைத்து, அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

நிகழ்ச்சி தொடக்கமாக நாள்தோறும் சூர்யபிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9 ஆம் நாளான வருகிற 5 ஆம் தேதி தைப்பூசத்து அன்று திருத்தேரோட்டமும், வருகிற 12 ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் இவ்வாண்டிற்கான தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT