தமிழ்நாடு

இன்று, நாளை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (ஜன.28, ஜன.29) இயங்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) ஜன.28-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43759) ஜன.29-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல்-திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43255) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்ட்ரல்-திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 66007) ஜன.28, 29 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT