செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்து ஓட்டுநர் மட்டும் லேசான காயமடைந்தார். மற்ற அனைவரும் அதிர்ஷ்வடசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர்.
இதையும் படிக்க | அதானி குழுமத்தில் எல்ஐசியின் ரூ. 74 ஆயிரம் கோடி, ஸ்டேட் வங்கியின் 40% நிதி!!
சொகுசு பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.