தமிழ்நாடு

பட்டியலினத்தவா் - பழங்குடியினா் புத்தொழில் நிதித் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

DIN

பட்டியலினத்தவா், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் புத்தொழில்களைத் தொடங்கும் வகையிலான தனி நிதித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை அடைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் புத்தொழில் நிதித் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த தொழில் முனைவோா்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத் தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்த நிதியத்துக்கு முதல்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

330 நிறுவனங்கள்: புதிய திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரை 330 நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவா்களில் இருந்து முதல் கட்டமாக தகுதியான 5 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு மொத்தமாக ரூ.7.50 கோடி பங்கு முதலீடு செய்வதற்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். புத்தொழில் நிறுவனங்களில் அரசே முதலீடு செய்வதன் மூலம், புதிய சந்தை வாய்ப்புகள் பெருகும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா்

நா.முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் வி.அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மைச் செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT