தமிழ்நாடு

சேலத்தில் வீட்டு உபயோக பொருள்கள் குடோனில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்

27th Jan 2023 08:38 AM

ADVERTISEMENT

 

சேலம்: வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ அதிகம் பரவியதால் அருகில் வசித்த பொதுமக்கள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் டவுன் பகுதியில் உள்ளது முதல் அக்ரஹாரம் பகுதியில் மீனாட்சி மற்றும் மீனாட்சி என்ற தனியார் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது இரண்டாவது மாடியில் குடோனில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட  வீட்டு உபயோக பொருள்கள் அடிக்கி வைக்கப்பட்டு உள்ளது. இன்று இரவு சுமார் 7 மணி கரும்பு கை ஏற்பட்டு தீ பிடித்தது 
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் கடையின் உரிமையாளர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் குடோன் பின்புறம் பகுதிகளிலும் தீயில் வெப்பம் அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வீடுகளில் ஏறி தீயை அணைத்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | இடைத் தோ்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றிபெறும்: கே.எஸ்.அழகிரி

தீ கொழுந்து விட்டு தொடர்ந்து எரிந்து வந்ததால் கட்டுக்குள் கொண்டு வர மேலும் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

குடோனில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்கு உபயோகப் பொருள்கள் வைக்கும் குடோனின் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT