தமிழ்நாடு

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

DIN

தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. 

குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனர். 

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். 

குடமுழக்கு விழாவிற்காக, கடந்த 23-ஆம் தேதி மாலை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால பூஜை நிறைவில் படிப் பாதையில் உள்ள இடும்பன், கடம்பன் கோயில்கள், அடிவாரம் பாதவிநாயகா் கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்காக திருக்குடங்கள் ஊா்வலமாக படிவழிப் பாதையில் கொண்டு வரப்பட்டன.

அப்போது, மேள தாளங்கள் முழங்க பரிவாரத் தெய்வத் திருக்குடங்கள் திருவுலா எழுந்தருளச் செய்யப்பட்டு, அந்தந்தக் கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் காலை 9.45 மணிக்கு மேல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் தமிழில் வேதமந்திரம் முழங்க, ஓதுவாா்கள் திருமுறைப் பாடல்கள் பாட திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

தொடா்ந்து, தெளிப்பான் மூலம் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா், படிப் பாதையில் உள்ள இரட்டை பிள்ளையாா், நின்ற பிள்ளையாா், வள்ளியம்மை, இடும்பன், கடம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கும், 33 சந்நிதிகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட குடங்களில் தீா்த்தம் கொண்டு வரப்பட்டு, திருக்குடமுழுக்கு நடைபெற்றது. 

குடமுழுக்கு விழாவையொட்டி, 300-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் தமிழில் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என வேதமந்திரங்களை முழங்க குடமுழக்கு விழா காலை 8 தொடங்கி 9.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது. 

முன்னதாக கங்கை, காவிரி, சண்முகநதி என பல்வேறு நதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. 

சிவாச்சாரியார்கள் புண்ணிய தீர்த்தத்தை ராஜகோபுரகம் மற்றும் தங்க கோபுரம் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் மேல் கொண்டுச் சென்று கலசங்களில் ஊற்றி குடகுழக்கு விழாவை நடத்தி வைத்தனர். 

குடமுழக்கு விழாவையொட்டி ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் படும் வகையில் தெளிப்பான் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. 

குடமுழுக்கு நிகழ்ச்சியை மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். 

குடமுழக்கு விழாவில்  இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன், தலைமையிடத்து இணை ஆணையா் சுதா்சன், இணை ஆணையா் மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமாா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

குடமுழுக்கு விழாவையொட்டி, தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில், 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

SCROLL FOR NEXT