தமிழ்நாடு

காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !

DIN


காரைக்கால்: காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர்  எல்.முகமது மன்சூர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் 9.35 மணிக்கு தேசியக் கொடியேற்றிவைத்தார். பின்னர் புதுச்சேரி காவல்துறை சட்டம் ஒழுங்கு மற்றும் இந்தியன் ரிசர்வ் பெட்டாலியன் காவல் பிரிவினர், ஊர்க்காவல் பிரிவினர், தீயணைப்புத்துறையினர், கல்லூரி என்.சி.சி. பிரிவு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கொடி அணிவகுப்பை பார்வையிட்டார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை) உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காரைக்காலில் பல்வேறு அரசுத்துறை தலைமை அலுவலகத்திலும் அந்தந்த துறையின் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT