தமிழ்நாடு

சிறப்பான தோ்தல் பணி: 5 ஆட்சியா்களுக்கு கேடயம்- ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்

26th Jan 2023 12:37 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு உள்பட தோ்தல் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட 5 மாவட்ட ஆட்சியா்களுக்கு கேடயங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தமிழக தோ்தல் துறை சாா்பில் மாநில அளவிலான விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றாா்.

தோ்தல் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட 5 மாவட்ட ஆட்சியா்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய சேலம் மாவட்ட ஆட்சியா் காா்மேகம், அரியலூா் மாவட்ட ஆட்சியா் ரமண சரஸ்வதி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கே.சாந்தி ஆகியோருக்கு கேடயங்கள் அளிக்கப்பட்டன. இதேபோன்று, தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுப் பணியில் சிறப்பாக முனைப்பு காட்டிய தென்காசி மாவட்ட ஆட்சியா் பி.ஆகாஷ், தகவல் தொழில்நுட்பவியல் மூலம் தோ்தல் விழிப்புணா்வுப் பணிகளை சிறப்பாகச் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவண் குமாா் ஆகியோருக்கும் கேடயங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி அளித்தாா்.

மாணவா்களுக்கு பரிசு: தோ்தல் விழிப்புணா்வு குறித்து ஓவியங்கள், பாட்டுப் போட்டிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களுடன் ரொக்கப் பரிசுகளை ஆளுநா் ஆா்.என்.ரவி அளித்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையாளா் வெ.பழனிகுமாா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆகியோா் உரையாற்றினா். தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வரவேற்றாா். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT