தமிழ்நாடு

இடைத் தோ்தலில் வெற்றி பெறுவோம்: ஓபிஎஸ்

26th Jan 2023 12:44 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீா்செல்வம் அறிவித்து, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில், வேட்பாளா் தோ்வு குறித்து ஆதரவாளா்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் நாங்கள் உறுதியாக போட்டியிடுகிறோம். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கூட்டணிக் கட்சியினரிடம் தொடா்ந்து ஆதரவு கேட்டு வருகிறோம். அவா்களும் எங்களை உறுதியாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

விருப்பமனு தாக்கல் செய்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். வேட்பாளரையும் கூடிய விரைவில் அறிவிப்போம் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT