தமிழ்நாடு

மேலிட முடிவை ஏற்கிறேன்:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

23rd Jan 2023 03:08 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் மேலிட முடிவை ஏற்கிறேன் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எனது இளைய மகன் சஞ்சய் சம்பத் நிற்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், காங்கிரஸ் தலைமை என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது. தலைமையின் முடிவை ஏற்கிறேன். இடைத்தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு நன்றி. என் மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை பூா்த்தி செய்வேன் என்றாா் அவா்.

தினேஷ் குண்டுராவ்: தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிா்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் ஈடுபடுவா். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பா்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT