தமிழ்நாடு

ஓ.பன்னீர் செல்வம் திடீர் குஜராத் பயணம்! 

22nd Jan 2023 08:23 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சென்னையில் இருந்து குஜராத் மாநிலம அகமதாபாத் புறப்பட்டார். இன்று மாலை அகமதாபாத்தில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மேலும், பயணத்தின் இடையே ஓ.பன்னீா்செல்வம்  முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் குஜராத்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிரடி சோதனை

ADVERTISEMENT

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாவது:

பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவே குஜராத் செல்கிறேன். அரசியல் காரணங்கள் இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT