தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

22nd Jan 2023 08:31 AM

ADVERTISEMENT

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து குறைந்த வந்த நிலையில், தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 755 கன அடியிலிருந்து வினாடிக்கு 824 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.  

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 755 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 824 கன அடியாக  அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா  பாசனத்திற்கு  வினாடிக்கு 10,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று காலை 107.20 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.61 அடியாக சரிந்தது. 

இதையும் படிக்க: ஓ.பன்னீர் செல்வம் திடீர் குஜராத் பயணம்! 

ADVERTISEMENT

அணையின் நீர் இருப்பு 73.61 டி.எம்.சியாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT