தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு: பாஜக 2  நாள்களில் முடிவு!

22nd Jan 2023 12:50 PM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவெடுக்கும் என்று கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கூறினார். 

ஈரோடு பாஜக கட்சி அலுவலகத்தில் அவர் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர்   செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

இந்த இடைத்தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடிப்பதற்கான வியூகம் வகுக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலுக்கும் தவறான செய்கைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகும். எனவே பாஜக அதற்கான முற்றுப்புள்ளி வைக்கவும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கருதுகிறது. 

திமுகவை விழுத்தும் சக்தி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவை சேர்ந்த இரண்டு அணி தலைவர்களும் பாஜக ஆதரவை கூறியுள்ளனர்.  ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவு தருவேன் என்று கூறியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அதிமுகவின் இரண்டு அணிகளும் சேர்ந்து கூட போட்டியிடலாம். இரட்டை இலை கிடைக்குமா? கிடைக்காதா? என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொருத்தது. எங்களை பொறுத்தவரை திமுகவை விழ்த்த அனைத்து சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். 

ADVERTISEMENT

அதிமுக இரண்டு அணிகள் ஒருங்கிணைப்பதற்கு பாஜக ஒன்றும் சமரசம் செய்யாது. நேற்று உதயநிதி ஸ்டாலின், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு பாஜகவை சந்தித்ததை குறிப்பிட்டு எதற்காக அவர்கள் கட்சி நடத்துகின்றனர் என்று கூறியுள்ளார். அவரது தாத்தா கருணாநிதி வாஜ்பாய் இடம் நட்புக் கொண்டு அமைச்சரவிலேயே இடம் கேட்டு பெற்றார்.

முரசொலி மாறன் ஆறு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது கூட வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த போதுதான் இதை உதயநிதி மறக்கக்கூடாது.  எதற்காக ஆளுநர் மசோதாவில் கையழுத்திடவில்லை என்பதை அண்ணாமலை விளக்கி உள்ளார். 

சர்சைக்குரிய பல மசோதாக்கள் உள்ளன. அதில் ஒன்று தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்குவது. அண்ணாமலைக் கூறிய பிறகு தான் அது பற்றி தெரியவந்தது. கட்சித் தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறையை கலைப்போம் என்று கூறியது கோயில்களில் நடைபெறும் ஊழல்களை கண்டித்து தான்.

இதையும் படிக்க: ‘இலட்சிய படக்குழு; லவ் யூ தளபதி’- வாரிசு பாடலாசிரியர் விவேக் ட்வீட்!

தைரியம் இருந்தால் பழனி, திருச்செந்தூர் போன்ற புகழ்வாய்ந்த கோயில்களின் வருமானம், செலவினம் என வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். பக்தி குழுக்களிடம் கோயில்கள் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பாஜக நிலைப்பாடு. முடிந்தால் தனி பட்ஜெட் திருக்கோவிலில் சம்பந்தமாக போடலாம். கோயில்கள் வேண்டாம் என்பதல்ல எங்கள் நிலைப்பாடு என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT