தமிழ்நாடு

குடியரசு நாள் ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

17th Jan 2023 07:08 PM

ADVERTISEMENT

குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை காரணமாக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் குடியரசு நாள் வருகின்ற ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக ஜன.20, 22 மற்றும் 24 ஆகிய 3 நாள்களில் குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை காமராஜா் சாலையில் உள்ள உழைப்பாளா் சிலைப் பகுதியில் நிகழாண்டில் குடியரசு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் காமராஜா் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக, குடியரசு நாள் நடைபெறும். இந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு நாள் நிகழ்ச்சிகளை அங்கு நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை காரணமாக ஜன.20, 22, 24 மற்றும் ஜன.26 ஆகிய நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிக்க: மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு!

மேற்கண்ட நாள்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT