தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி

17th Jan 2023 02:42 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பொங்கல் திருநாளையொட்டி அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் 1,000 காளைகள், 350 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 

ADVERTISEMENT

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேலரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில மற்றும் சுற்றுலா பார்வையாளர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். இதனால் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து பார்வையாளர்கள் மீது காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஏறாளமான நபர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிக்க | அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை பேட்டி

ADVERTISEMENT
ADVERTISEMENT