தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,100 கன அடியாக அதிகரிப்பு

17th Jan 2023 09:03 AM

ADVERTISEMENT


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 1,018 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,466 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 1,018 கன அடியாகச்  சரிந்தது. 

இதையும் படிக்க | இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! - சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

இந்நிலையில், நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 1,100 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம்  109.51 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 77.71 டி.எம்.சியாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT